தோல்விக்கு இஷாந்த் சர்மா தான் காரணம்! கங்குலி

ishant-sharma

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் வர்ணனையாளருமான கங்குலி இஷாந்த் சர்மாவின் தெரிவு குறித்து விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இஷாந்த் சர்மா மூத்த பந்துவீச்சாளர் ஆவார், அதிக அனுபவம் பெற்ற அவரால் நேர்த்தியுடன் பந்துவீச முடியவில்லை.

நெருக்கடியில் இருக்கும் அவர் தொடர்ந்து ஓட்டங்களை வாரி கொடுத்து வருகிறார். அவர் அணியில் தொடர்ந்து நீடித்து வருவது ஏன் என்று இதுவரையிலும் புரியவில்லை, தொடர்ந்து அவரை அணியில் சேர்த்து இருப்பது தவறானது.

இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பந்துவீச்சாளர் முகமது ஷமி, பந்துவீச்சின் முதுகெலும்பாக உள்ளார்.

வீராட் கோஹ்லி உலகின் சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

உலகின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார், ஒருநாள் போட்டிக்கான அணியில் புஜாரா, ஜாகீர்கானை சேர்க்க வேண்டும்.

நியூசிலாந்து போன்ற ஆடுகளங்களில் அவர்களது பணி முக்கியத்துவம் பெற்று இருக்கும்.

டெஸ்ட் அணியில் இடம் பெற்ற அவர்களை தெரிவு குழுவினர் ஒருநாள் போட்டியிலும் சேர்த்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

By True Tamil

ஜனவரி 20, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு