மே20, மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் யு.ஏ.எல்.ஏ. அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சியாக்ரே பகுதியில் யு.ஏ.எல்.ஏ. என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர். இது குறித்த பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அப்பகுதி போலீசார் ,மத்திய ரிசர்வ் பரைட, கோப்ரா கமாண்டோ படையை சேர்ந்த வீரர்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
இதையறிந்த தீவிரவாதிகள், போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தனர். இதனையடுதது இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். கடும் துப்பாக்கிச்சண்டைக்கு பின் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுனையடுத்து வீட்டிற்குள், அதிரடியாக நுழைந்து பாதுகாப்பு படை வீரர்கள் அங்கிருந்த 3 ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தில் தீவிரவாத தலைவனிடம் குழந்தை ஒன்று சிக்கிக்கொண்டது. இதனைப்பயன்படுத்தி யு.ஏ.எல்.ஏ. அமைப்பின் தலைவர் நரோக் தப்பிவிட்டார் எனினும் திவிரவாதி தலைவனை பிடிக்க போலீஸார் தொடந்து தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
![]()

