இந்தியா முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு நாள் (மே21) அனுசரிப்பு!

anti-terrorism

மே21,நாடு முழுவதும் புதன்கிழமை(மே 21)தீவிரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி, தீவிரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. வழக்கமான நடவடிக்கைகளுடன், இந்த தினத்தில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொள்வது வழக்கம்.

வன்முறை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி நல்வழிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தீவிரவாத எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்டுகிறது.

இந்த நாளில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் நேருக்குநேர் விவாதங்கள், கலந்தாலோசனைகள், கருத்தரங்கங்கள், விரிவுரைகள் ஆகியவை தீவிரவாதம் மற்றும் வன்முறையின் மோசமான விளைவுகள் குறித்து நடத்தப்படுகின்றது.

மேலும், மக்கள் இடையே வன்முறை மற்றும் தீவிரவாதத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள மக்களும் சமூகமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது எடுத்துரைக்கப்படுகிறது.

பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சமூகம் மற்றும் கலாச்சார அமைப்புகள் வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றின் மோசமான விளைவுகளை தங்களின் நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றன. தீவிரவாத எதிர்ப்பு வன்முறை எதிர்ப்பு குறித்த உறுதி மொழி அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் இதர பொது நிறுவனங்களில் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு