குஜராத் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் மோடி! புதிய முதல்வராகிறார் ஆனந்தி பென் படேல்!

gujarath-cm

மே21,மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் குஜராத் மாநில முதல்வர் பதவியை இன்று அவர் ராஜினாமா செய்ய உள்ளார்.

இதுகுறித்து மாநில பா.ஜ.க தலைவர் ஓம் மாத்தூர் கூறும் போது குஜராத் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் மோடி இன்று கலந்து கொள்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ.க்கள் பிரிவு உபசார விழா நடத்துகிறார்கள். நரேந்திர மோடி ராஜினாமாவைத் தொடர்ந்து, குஜராத் புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அதிலும், மோடி கலந்து கொள்கிறார். மேலிட பார்வையாளராக பா.ஜ., மூத்த தலைவர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்கிறார். அதில், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்று மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய முதலவராக தேர்வாகும் ஆனந்தி பென் படேல் நாளை பதவியேற்க உள்ளார். இப்பதவியேற்பு விழாவிலும் மோடி கலந்து கொள்வார் என தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு