ஜூன் 18,சாத்தூர் அருகே திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (படம்). திமுக கிளைச் செயலராக இருந்த இவர் மூன்று முறை ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், கம்மாபட்டியில் உள்ள முனியசாமி கோயில் அருகே நேற்று 17.06.2014 செவ்வாய்க்கிழமை மதியம் சீனிவாசன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி கோயில் பூசாரி சுந்தர்ராஜன் என்பவர் , சீனிவாசனை சராமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், சீனிவாசன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவலறிந்த சாத்தூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அறிவானந்தன் சம்பவ இடத்துக்குச் சென்று கொலை குறித்து விசாரணை நடத்தினார்.
சீனிவாசனின் மனைவி சண்முகலட்சுமி அளித்த புகாரின் பேரில், இருக்கன்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
![]()

