kamal

ஜூன்18,உலகநாயகன் கமலின் உண்மையான உண்மையான ரூபத்தை காட்டிய படம் விஸ்வரூபம். அதன் உத்வேகத்தில் கமல் உருவாக்கும் படம்தான் விஸ்வரூபம் 2′. இது தாமதமான காரணத்தால் கமல் உடனடியாக தொடங்கிய படம் தான் ‘உத்தம வில்லன்’.

இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், ‘பூ’ பார்வதி, இயக்குனர் பாலசந்தர், இயக்குனர் விஸ்வநாத், ஜெயராம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. வழக்கத்தைப் போல கதை, திரைக்கதையை கமல் எழுத, இயக்கம் மட்டும் ரமேஷ் அரவிந்த். இதை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த இரண்டு படத்திற்கும் ஜிப்ரான் தான் இசையமைக்கவுள்ளார். இதை தொடர்ந்து கமல் மலையாள ரீமேக்கான த்ரிஷ்யம் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலுடன், இளையராஜா கைகோர்க்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது லேட்டஸ்ட் தகவலாக ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கிலும் ஜிப்ரான் தான் இசையமைக்கப் போகிறாராம். இதன் மூலம் கமலுடன் ஜிப்ரான் 3வது முறையாக இணையவுள்ளார். .

கமல் எப்பவும் அப்படித்தான். அவரை யாராவது ஒருமுறை கவர்ந்துவிட்டால் போதும் தொடர்ந்து இப்படிதான் வாய்ப்பு கொடுத்து திக்குமுக்காட வைத்துவிடுவார். நாகேஷ், நாசர், சந்தான பாரதி தொடர்ந்து தற்போது அந்தப் பட்டியலில் ஜிப்ரான் இணைந்துவிட்டார் போல!!!

Loading