பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் அவசர கடிதம்!

modi-with-vijay

சேவை வரியை ரத்து செய்து சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடித்தத்தில் கூறியுள்ளதாவது:

பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று சினிமாத்துறையையும் தாங்கள் நேசிப்பவர் என்பதால் இந்த கோரிக்கையை தங்களுக்கு வைக்கிறேன். சினிமா மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் துறையாகும்.

ஆனால் கடந்த பல வருடங்களாக சினிமா, கவனிப்பாரின்றி பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பல திரையரங்குகள், திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன. மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த ஆட்சியில் புதிதாக சுமத்தப்பட்ட சேவை வரியால் இந்திய சினிமா பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. (இது போன்று இன்னும் பல தகவல்களுடன் கடிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.)

எனவே இந்த சேவை வரியை ரத்து செய்து சினிமாத் துறையை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு