fisher-man

ஜூன் 21, இலங்கையில் தொடர்ந்து இனவாத முறையில் மொழிவாரி முறையில் அந்நாட்டு பௌத்த அரசு தமிழ் மக்கள் மீது வன்மமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த கால நிகழ்வுகளை இது விடுதலைப் புலிகள் அழிப்பு மட்டுமே என்று சொல்லிவந்த அரசு இப்போது தமிழ் மக்களையும் தாண்டி இஸ்லாம் சமுதாய தமிழ் மக்களையும் தாக்கி வருகிறது.

இப்படியாக தொடரும் தாக்குதலுக்கு அஞ்சி அகதிகளாக தினந்தோறும் இலங்கையில் இருந்து மக்கள் கூட்டம் வந்தவண்ணம் இருக்கின்றனர். அப்படியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு இலங்கை கிளிநொச்சியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று அரிச்சல் முனைக்கு வந்தனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ராமேஸ்வரம் கடற்பகுதியில் 900க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 50 பேர் மட்டுமே டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading