இந்திய கருப்புப் பண முதலீட்டாளர்கள் பட்டியலை வழங்க ஸ்விஸ் வங்கி முடிவு!

swiss

ஜுரிச், ஜூன் 22, இந்தியாவில் தகாத முறையில் பணம் சம்பாதிப்பவர்கள் அந்த கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசியமாக ‘டெபாசிட்’ செய்கின்றனர். இதற்கென அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய வங்கிகள் மிகப் பெரியவை ஆகும்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ‘டெபாசிட்’ செய்துள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றன. தற்போது ஆட்சிப்பொறுப்பு ஏற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.

இதற்காக முதல் கட்டமாக ‘சிறப்பு விசாரணைக்குழு’ அமைத்துள்ளது. இந்த நிலையில் சுவிஸ் தேசிய வங்கியின் மத்திய குழு, வங்கி விதிகளுக்கு உட்பட்டு ஒரு புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டது. அதன்படி இந்தியர்களின் ‘டெபாசிட்’ கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் அதிகரித்து, ரூ.14 ஆயிரம் கோடியை (2 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ்) தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கையின் காரணமாக பல மோசடி பேர்வழிகள் தொடை நடுங்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு