தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தீர்வை ஏற்ப டுத்தும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.
காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழக பிராந்திய வளாகம் திறப்பு மற்றும் கல்வித் திட்டம் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக திரு வாரூர் வழியாக வந்த போது, திருவாரூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறீயதாவது:-
தமிழக மீனவர்கள் பிரச்னைக் குறித்து இலங்கை மீனவர்களுடன் பேசித் தீர்வு காண மத்திய அரசு முற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பேச்சுவார்த்தை பலன் தராது என சிலர் அவநம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதையெல்லாம் முறியடித்து மத்திய அர சு மீனவர் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தும். மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை என் பதைக் கணக்கில் கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும்.
காவிரிப் பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்பட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கா விரி நீர்க் கண்காணிப்புக் குழு அமைப்பது மட்டுமே நிரந்தர தீர்வாகும் என்பதே என்னு டைய கருத்து. இதுவே ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்தாகும். இக்கருத்தையே தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றார் வாசன்.
![]()

