ஜூலை 8, தமிழகத்தில் பிறந்து உலகப் புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘ராமானுஜன்’ படம் வரும் ஜூலை 11ல் திரைக்கு வருகிறது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் ஞான. ராஜசேகரன் இயக்கத்தில், ஜெமினி கணேசன் – சாவித்ரியின் பேரன் அபினவ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்க இந்தப் படம் வெள்ளித் திரைக்கு வருகிறது.
மலையாள நடிகை பாமா, ராமானுஜன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுஹாசினி மணிரத்னம், அப்பாஸ், நிழல்கள் ரவி, சரத்பாபு, தலைவாசல் விஜய் ஆகியோரும் இதில் உடன் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் வினாயகம் இசையில் படம் வெளிவருகிறது. பாடல்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகாகவி பாரதியை நம் கண்முன் நிறுத்திய இயக்குனர் என்பதாலும் உலகப் புகழ் பெற்ற கணித மேதையின் திரைக்காவியம் என்பதாலும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் என்பது படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
இப்படத்தின் இயக்குனர் முன்னால் ஐ.ஏ.எஸ் என்பது குறிப்பிட தக்கது.
![]()


