விஜய் முகத்திரையை கிழித்த இயக்குனர் ராம்!

 

ஜூலை 8, கடந்த எட்டு ஆண்டுகளாக விஜய் தொலைகாட்சி நிறுவனம் வழங்கி வரும் ‘விஜய் விருது’ இந்த வருடமும் சிறப்பாக நடத்தியது.

அந்த விழாவில் சிறந்த பாடலுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதுக்கும் தன் பெயர் வருமென எண்ணியிருந்த தங்க மீன்கள் சாதனாவிற்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

அப்போது மேடையேறி சிறந்த படத்துக்கான விருதை பெற்ற இயக்குனர் ராம், தேசிய விருது பெற்ற குழந்தைக்கு விஜய் விருது கிடைக்கவில்லை என்பதோடு ‘ஆனந்த யாழை’ பாடல் நாமினியில் கூட இடம்பெறாமல் போனதே !, அந்த பாடல் அவ்வளவு  கெட்ட பாடலா? என கேட்க வேறு ஒரு கேட்டகரியில் இருப்பதாக மழுப்பல் பதில் கூறி மேடையிலிருந்து இறக்க முயற்சித்த கோபிநாத் தோற்றுபோனார்.

அந்த பாடலை ஒலிக்கசெய்ய ராம் கேட்க கோபி இல்லை என்று சொல்ல இறுதியில் பார்வையாளர் ஒருவர் பாட, அந்த பாடலின் இசையமைப்பாளர் யுவனை மேடையேற்றி படத்திற்காக வாங்கிய விருதை யுவனுக்கு சமர்ப்பித்து இருவரும் கீழிறங்க எந்த சூழலையும் சமாளிக்கும் கோபிக்கு வியர்த்ததில் தெரிந்தது உள்குத்து.

இப்படி ஒரு சாரராக செயல்பட்ட விஜய் தொலைகாட்சியை அந்த மேடையிலேயே முகத்திரையை கிழித்த இயக்குனர் ராமிற்கு ஒரு வணக்கம்.

 

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு