பிரதமர் மன்மோகன்சிங்குடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு

manmohan-singh-rahul-gandhi

புதுடெல்லி, ஜன. 21 – பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல் காந்தி சந்தித்து ஜெயின் இனத்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று முன் தினம் சந்தித்து பேசினார்.

அப்போது ஜெயின் இனத்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்கனவே ஜெயின் இனத்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதற்கான வேலைகளை தொடங்கி யுள்ளது.

இதற்கு சிறுபான்மையினர் தேசிய கமிஷன் ஏற்கனவே ஒப்புதல் கொடுத்து விட்டது. ஜெயின் இனத்தவர்கள் மத்திய அமைச்சர் பிரதீப் ஜெயின் தலைமையில் இது தொடர்பாக ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள்.

அப்போது தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

மத அடிப்படையில் முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், புத்தமதத்தினர். பார்சிஸ் இனத்தினர் ஆகியோர் சிறுபான்மையினர் பட்டியலில் உள்ளனர்.

தற்போது ஜெயின் இனத்தவர்களையும் சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9ல் இருந்து 12 ஆக உயர்த்த வேண்டும் என்று ராகுல் காந்தி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதன் அடிப்படையில் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வரும் சிலிண்டர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 12 ஆக உயர்த்தப்பட்டது.

அதே போல ராகுல் காந்தியின் இந்த கோரிக்கையையும் பிரதமர் நிறைவே றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By True Tamil

ஜனவரி 20, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு