ஜூலை14,உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் அர்ஜெர்டினா, ஜெர்மனி அணிகள் மோதின.
ஆட்ட முடிவுக்கு 8 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியோ கோட்சே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் கோலும் அதுதான்.
இதன் மூலம் ஆட்ட இறுதியில் அர்ஜெண்டினா அணி கோல் ஏதும் அடிக்காத சூழலில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்று 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை பெற்றது ஜெர்மனி.
![]()

