arunjetly

புதுடில்லி:”சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள், 700 பேரின் பெயர், விவரத்தை பிரான்சிடம் இருந்து பெற்றுள்ளோம்,” என, லோக்சபாவில் நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார்.

இந்தியாவில் முறைகேடான விதங்களில் பணத்தை சம்பாதித்தவர்கள், வருமான வரி விதிப்பிலிருந்து தப்பிக்கவும், அந்த பணத்தை பதுக்கவும், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளின் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, லோக்சபாவில் நேற்று நிதி அமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள, இந்தியர்கள் குறித்த விவரங்களை, பிரான்ஸ் அரசு நமக்கு தந்துள்ளது. அவற்றை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில், அந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் கூடுதல் தகவல்களை தருமாறு, சுவிட்சர்லாந்து வங்கிகளிடம் கேட்டுள்ளோம். அந்நாட்டின் சட்ட வரன்முறைகளுக்கு உட்பட்டும், நம் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் அந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளன. அதில் கூடுதல் சட்ட விவகாரங்களை அந்நாடு எழுப்பியுள்ளது. இவ்வாறு, அருண் ஜெட்லி கூறினார்.

 

Loading