cm-sanscrit

ஜூலை19, சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் ஆகஸ்ட் 7 முதல் 13ம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டிற்கு என்று ஒரு கலாச்சார பாரம்பரியம் நிறைந்த மிகப் பழமையான தமிழ் மொழி உள்ளது. எங்களுக்கு என்று மிக சக்தி வாய்ந்த சமூக அமைப்பும், மொழிக்கான இயக்கமும் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் சமஸ்கிருத மொழி வாரம் கொண்டாடப்படுவது சரியான விஷயமாக இருக்காது. இதே போல ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவர்களுக்கான மொழி மற்றும் கலாச்சாரம் இருக்கிறது.

எனவே, அனைத்து மாநில மொழிகளையும், கலாச்சாரத்தையும் மதிக்கும் வகையில், அந்தந்த மாநிலத்தில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகள், அந்தந்த மொழிகளை ஊக்குவிக்கும் வகையிலான வார விழாவைக் கொண்டாடுமாறு அறிவுறுத்துவதே சிறந்ததாக இருக்கும் எனவும், இதுவே நமது நாட்டின் ஒற்றுமையை பேண ஏற்ற முறையாகும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Loading