ஜூலை 20, பரபரப்புக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால்வர்மா தான் இந்தப் படத்தை தயாரித்து இருக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘ஐஸ்கிரீம்’. நவ்தீவ், தேஜஸ்வி, சந்தீப்தி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு பங்களாவிற்குள்ளே நடைபெறுவதுபோல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 832 ரூபாய் என்கிறார் ராம்கோபால்வர்மா.
படப்பிடிப்பு நடத்தத் தேவையான ஒரு பங்களாவிற்காக மட்டும்தான் செலவு செய்தார்களாம். மற்றபடி படத்தில் நடித்த நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் உட்பட யாருக்கும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையாம். சமீபத்தில் வெளியான இந்த படம் எதிர்பாராதவகையில் பெரும் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகிறதாம்.
அதுவும் தற்போது இப்படத்தின் வசூல் கோடிகளில் சென்று கொண்டிருக்கிறதாம். படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் ராம்கோபால்வர்மா. இதுவொரு திகில், சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இன்றைய தலைமுறை புதுமுக இயக்குனர்களுக்கும், இயக்குனர் பிரமாண்டம் சங்கருக்கும் இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் பல கோடிகளை வசூலிக்கும் என்று ஆணித்தரமாக நம்பும் ஆர்ஜிவி கதையை மட்டுமே நம்பி படமெடுத்துள்ளார்.
![]()

