sikarthanda

ஜூலை21, பீட்சா என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மக்கள் மனதில் அஸ்திவாரம் போட்டு அமர்ந்தார். அடுத்ததாக இவர் இயக்கிய படம்தான் இந்த ‘ஜிகர்தண்டா’. அடுத்த படம் எப்போது எடுப்பீர்கள் என்ற கேள்வி முடியும் முன்பே ஆரம்பித்த இப்படம் தற்போது முடிவு கண்டு மக்கள் கண்களுக்கு விருந்தளிக்க உள்ளது.

இப்படத்தில் சித்தார்த், லக்ஷ்மிமேனன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இப்படம் தொடங்கியதிலிருந்தே ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

jikar-pic

இதைத் தொடர்ந்து வரும் 25ம் தேதி வெளியாகவிருக்கிறது ‘ஜிகர்தண்டா’. ருசிக்க நீங்கள் தயாரா? என்கிறார் படத்தின் இயக்குனர் கார்த்திக்.

Loading