4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு பின்னடைவு!

bjp-down

ஆகஸ்ட் 26, பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் வெற்றியை பாட்னாவில் திங்கள்கிழமை, இனிப்பு வழங்கி அக்கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிகார், கர்நாடகம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பிகாரில் 10 தொகுதிகளில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலின்போது பதிவான வாக்குகள் 25.08.2014 (திங்கள்) அன்று எண்ணப்பட்டன.

அதில், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதீஷ் குமார் சார்ந்துள்ள ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி அடங்கிய மதச்சார்பற்றக் கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மத்தியில் பொறுப்பேற்று இருக்கும் பிஜேபிக்கு இது பலத்த நெருக்கடியை கொடுக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு