ஆகஸ்ட் 26, பல வெற்றி படங்களை கொடுத்த பாரதிராஜா சமீபகாலமாக எந்த வெற்றியையும் கொடுக்க முடியவில்லை. கடைசியாக இவர் இயக்கிய அன்னக்கொடி திரைப்படமும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாராதிராஜா ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான பாசத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் பாரதிராஜாவுடன் புதிதாக கைகோர்க்கவிருப்பவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
இளைய தலைமுறையினருடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வரும் பாரதிராஜா, ஏற்கெனவே இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷுடன் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()

