ஒரு ஊர்ல ரெண்டு ராஜா! இவர் ரெண்டு ராணிக்கு ராஜா!

oru-oorla

‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் ‘ஊர்ல ரெண்டு ராஜா’  படத்தை இயக்குகிறார். விமலுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். மேலும் நாசர், தம்பிராமையா, சூரி, சிங்கமுத்து, ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் ரெயிலில் நடக்கும் எதார்த்தமான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் ஆடியோவை சிவகார்த்திகேயன் வெளியிட இயக்குனர் விக்ரமன் பெற்றுக்கொண்டார். ஆடியோ விழாவின் ஹைலைட்டே பிரியா ஆனந்த் தான். பேச மைக் பிடித்த நாயகி பிரியா ஆனந்திடம், தொகுத்து வழங்கியவர், “உங்களுக்கு ஆசை ஒன்று இருக்குதாமே” என கேட்க, அதற்கு பிரியா ஆனந்த் “ஆமாம், இசையமைப்பாளர் இமானின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்ச வேண்டும் ,” என இயக்குனரிடம் சொல்லியிருந்தேன் என்றார்.

oru-oorala-2-raja

உடனே யாரும் எதிர்பாராத வகையில் இமானிடம் சென்று “சார்.. ப்ளீஸ்.. ஒரே ஒரு தடவை” என்று சொன்னவர் அவரது கன்னத்தை பிடித்து ஆசைதீர கிள்ளியதோடு, செல்லமாக “என் அமுல் பேபி.. செல்லக்குட்டி” எனவும் கொஞ்சினார்.

இதை கண்டதும் மேடையில் உட்கார்ந்திருந்தவர்களும் பார்வையாளர்களும் அப்படியே ஒரு நிமிடம் ஷாக் ஆகிப்போனார்கள். பார்வையாளர்கள் வரிசையில் இமானின் மனைவியும் அமர்ந்திருந்தார்.

இதையடுத்து இமான் பேச வந்தபோது “இன்னைக்கு வீட்டுல எனக்கு நல்லா அடி கிடைக்கும்” என்று சொல்லி பரிதாப முகம் காட்டினார்.

இந்த பொண்ணு எங்க ஊரு பக்கம் வந்த சொல்லுங்க!?

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு