மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை! ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் என்னவாகும்!?

maran-brotherss

 

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட நான்கு பேர் மற்றும் நான்கு நிறுவனங்கள் மீது தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தாக்கலை நீதிபதி ஓ.பி.சைனி பதிவு செய்து கொண்டார். “இதுகுறித்து வரும் செப்டம்பர் 11-இல் விசாரணை நடத்தப்படும்’ என்று குறிப்பிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை செப்டம்பர் 11-இல் நடைபெறும்போது, சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ள விவரங்களை நீதிபதி ஆய்வு செய்வார்.

அப்போது,குற்றச்சாட்டுகளுக்கு போதுமான முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கருதினால், குற்றம்சாட்டப்பட்டவர்களை குறிப்பிட்ட தேதியில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு