ஜெ’ வழக்கு பற்றி கருணாநிதி கருத்து!?

jaya-with-mk

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேள்வி – பதில் வடிவில் வெள்ளிக்கிழமை கருணாநிதி அறிக்கை:-

கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே

பதில்: இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது.

கே: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா

ப: உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவங்கள் உண்டு. நான் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க.அழகிரி மீதான வழக்கை மராட்டிய மாநிலத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.

கே: தீர்ப்பைத் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையால் ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான தொகையை அதிமுகவிடம் இருந்து பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாரே

ப: உண்மையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துதான் இது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறை செயல்களில் ஈடுபட்ட அதிமுகவைத் தடை செய்யவும் தயங்கக் கூடாது என்று தமிழக ஆளுநருக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு மே 13-ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய அரசு தயங்காது என்று கூறினார்.

அதனை நினைவுபடுத்திதான் ராமதாஸ் தற்போது கூறியுள்ளதாக கருணாநிதி கூறினார்.

இப்படி பதில் கூற இவரால் மட்டுமே முடியும்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு