டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம்

karunanidhi

சென்னை: தி.மு.க மீது குற்றம் சாட்டியுள்ள பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

” திமுக தூண்டுதலின் பேரில் பாமகவினரை விடுதலைச் சிறுத்தைகள் தாக்குவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளைத் தூண்டிவிடுவதுதான் எங்கள் வேலையா? வேறொருவரைத் தூண்டிவிட்டு, தாக்குதல் நடத்தும் படி சொல்லும் புத்தி திமுகவுக்கு என்றைக்கும் கிடை யாது. அதிமுக ஆட்சியில் பாமகவினர் மீது வழக்குகள் போடப்பட்டபோது, அதைக் கண்டித்ததுடன், திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

1992-ம் ஆண்டில் பாமக வன்முறை இயக்கம் என மத்திய அரசுக்கு அதிமுக அரசு கடிதம் எழுதியபோது, அதை எதிர்த்தவன் நான். ஆனால், வன்முறை திமுகவுக்கு கை வந்த கலை என்கிறார் ராமதாஸ். சில பேருக்கு நாக்குதான் விரோதி.”

By True Tamil

ஜனவரி 21, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு