ஹைதராபாத், ஏப்ரல் 05: இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் பத்தாவது சீசன் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.
மே 21 ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடரின் தொடக்க விழா நிகழ்வு இந்த ஆண்டு எட்டு இடங்களில் நடக்கிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும்.
கேப்டன் வார்னர், யுவராஜ்சிங், ஷிகார் தவான், தீபக் ஷீடா, ரஷீத் கான், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது, பிரவீன் தாம்பே போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்.
நெக்ரா, முஷ்டாபிசுர் காயம் சரியாகி அணிக்கு திரும்பும் வரை அணிக்கு சற்று பாதிப்பாகவே இருக்கும்.
வார்னர், தவான் நல்ல நிலைக்கு திரும்புவதை பொறுத்தே ஐதராபாத் அணியின் பேட்டிங் இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
தற்காலிக கேப்டன் வாட்சன் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த ஐபிஎல் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
கேப்டன் விராட் கோலி, ராகுல், டிவில்லியர்ஸ் போட்டியில் இருந்து விலகி உள்ளனர் என தெரிகிறது.
பெங்களூர் அணியின் பலம் அதிரடியான பேட்டிங்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.
டாரன் பிராவோ, யூசுப் பதான், மனிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், வோக்ஸ், சுனில் நரீன், டிரென்ட் போல்ட், குலதீப் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
கேப்டன் காம்பீர், உத்தப்பாவின் தொடக்கம் கொல்கத்தா அணிக்கு பலம். ஆந்த்ரே ரஸ்சல் இல்லாதது அணிக்கு சின்ன சருக்கல்.
குஜராத் லயன்ஸ்:
ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியது.
பிரண்டன் மெக்குல்லம், வெய்ன் சுமித், பல்க்னெர் ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக் மற்றும் ஜேசன் ராய் போன்ற சிறந்த வீரர்கள் லயன்ஸ் அணியில் இருக்கிறார்கள்.
ஆல் ரவுண்டர்களான ஜடேஜா, பிராவோ ஆகியோர் காயத்தால் 2 வாரம் ஆடாமல் போவது அந்த அணிக்கு பலவீனமே.
மும்பை இந்தியன்ஸ்:
ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி திறமையை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளது.
ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர், போல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, லெண்டில் சிம்மன்ஸ், அம்பதி ராயுடு போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
பந்து வீசில் ஹர்பஜன், பும்ரா ஆகியோர் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
மேக்ஸ்வெல் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் களமிறங்குகிறது.
மார்கன், ஸ்டானிஸ், மில்லர், வோரா, விருத்திமான் சகா போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்.
முன்னாள் அதிரடி வீரரான ஷேவாக்கின் ஆலோசனை பஞ்சாப் அணிக்கு பலம்.
முரளி விஜய் காயத்தால் விலகியது அணிக்கு பாதிப்பே.
டெல்லி டேர்டெவில்ஸ்:
ஜாகீர்கான் தலைமையிலான அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பைக்காக காத்திருக்கிறது.
டுமினி, குயின்டன் டிகாக ஆகியோர் காயத்தால் ஆடாதது டெல்லி அணிக்கு பாதிப்பு.
கும்மினஸ், மோரிஸ், ரபடா, அமித் மிஸ்ரா உள்ளனர். கோரி ஆண்டர்சன், கருண் நாயர், மேத்யூஸ், ரிசப்பன்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
9 ஐபிஎல் போட்டியிலும் விளையாடி இறுதிப்போட்டிக்கு நுழையாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்:
கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டு சுமித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரூ.14½ கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோகஸ் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
ரகானே, பாப் டு பிளிஸ்சிஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அஸ்வின் காயத்தால் விலகியது புனே அணிக்கு பாதிப்பு.
முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.
இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி அட்டவணை [IPL 10 – 2017 Schedule]
| Date | Match | Venue | Time |
|---|---|---|---|
| 05 – April – 2017 | SRH vs RCB | Hyderabad | 08:00 PM |
| 06 – April – 2017 | RPS vs MI | Pune | 08:00 PM |
| 07 – April – 2017 | GL vs KKR | Rajkot | 08:00 PM |
| 08 – April – 2017 | KXIP vs RPS | Indore | 04:00 PM |
| 08 – April – 2017 | RCB vs DD | Bangalore | 08:00 PM |
| 09 – April – 2017 | SRH vs GL | Hyderabad | 04:00 PM |
| 09 – April – 2017 | MI vs KKR | Mumbai | 08:00 PM |
| 10 – April – 2017 | KXIP vs RCB | Indore | 08:00 PM |
| 11 – April – 2017 | RPS vs DD | Pune | 08:00 PM |
| 12 – April – 2017 | MI vs SRH | Mumbai | 08:00 PM |
| 13 – April – 2017 | KKR vs KXIP | Kolkata | 08:00 PM |
| 14 – April – 2017 | RCB vs MI | Bangalore | 04:00 PM |
| 14 – April – 2017 | GL vs RPS | Rajkot | 08:00 PM |
| 15 – April – 2017 | KKR vs SRH | Kolkata | 04:00 PM |
| 15 – April – 2017 | DD vs KXIP | Delhi | 08:00 PM |
| 16 – April – 2017 | MI vs GL | Mumbai | 04:00 PM |
| 16 – April – 2017 | RCB vs RPS | Bangalore | 08:00 PM |
| 17 – April – 2017 | DD vs KKR | Delhi | 04:00 PM |
| 17 – April – 2017 | SRH vs KXIP | Hyderabad | 08:00 PM |
| 18 – April – 2017 | GL vs RCB | Rajkot | 08:00 PM |
| 19 – April – 2017 | SRH vs DD | Hyderabad | 08:00 PM |
| 20 – April – 2017 | KXIP vs MI | Indore | 08:00 PM |
| 21 – April – 2017 | KKR vs GL | Kolkata | 08:00 PM |
| 22 – April – 2017 | RPS vs SRH | Pune | 04:00 PM |
| 22 – April – 2017 | MI vs DD | Mumbai | 08:00 PM |
| 23 – April – 2017 | GL vs KXIP | Rajkot | 04:00 PM |
| 23 – April – 2017 | KKR vs RCB | Kolkata | 08:00 PM |
| 24 – April – 2017 | MI vs RPS | Mumbai | 08:00 PM |
| 25 – April – 2017 | RCB vs SRH | Bangalore | 08:00 PM |
| 26 – April – 2017 | RPS vs KKR | Pune | 08:00 PM |
| 27 – April – 2017 | RCB vs GL | Bangalore | 08:00 PM |
| 28 – April – 2017 | KKR vs DD | Kolkata | 04:00 PM |
| 28 – April – 2017 | KXIP vs SRH | Indore | 08:00 PM |
| 29 – April – 2017 | RPS vs RCB | Pune | 04:00 PM |
| 29 – April – 2017 | GL vs MI | Rajkot | 08:00 PM |
| 30 – April – 2017 | KXIP vs DD | Indore | 04:00 PM |
| 30 – April – 2017 | SRH vs KKR | Hyderabad | 08:00 PM |
| 01 – May – 2017 | MI vs RCB | Mumbai | 04:00 PM |
| 01 – May – 2017 | RPS vs GL | Pune | 08:00 PM |
| 02 – May – 2017 | DD vs SRH | Delhi | 08:00 PM |
| 03 – May – 2017 | KKR vs RPS | Kolkata | 08:00 PM |
| 04 – May – 2017 | DD vs GL | Delhi | 08:00 PM |
| 05 – May – 2017 | RCB vs KXIP | Bangalore | 08:00 PM |
| 06 – May – 2017 | SRH vs RPS | Hyderabad | 04:00 PM |
| 06 – May – 2017 | DD vs MI | Delhi | 08:00 PM |
| 07 – May – 2017 | RCB vs KKR | Bangalore | 04:00 PM |
| 07 – May – 2017 | KXIP vs GL | Indore | 08:00 PM |
| 08 – May – 2017 | SRH vs MI | Hyderabad | 08:00 PM |
| 09 – May – 2017 | KXIP vs KKR | Indore | 08:00 PM |
| 10 – May – 2017 | GL vs DD | Rajkot | 08:00 PM |
| 11 – May – 2017 | MI vs KXIP | Mumbai | 08:00 PM |
| 12 – May – 2017 | DD vs RPS | Delhi | 08:00 PM |
| 13 – May – 2017 | GL vs SRH | Rajkot | 04:00 PM |
| 13 – May – 2017 | KKR vs MI | Kolkata | 08:00 PM |
| 14 – May – 2017 | RPS vs KXIP | Pune | 04:00 PM |
| 14 – May – 2017 | DD vs RCB | Delhi | 08:00 PM |
| 16 – May – 2017 | TBD vs TBD | Mumbai | 08:00 PM |
| 17 – May – 2017 | TBD vs TBD | Bangalore | 08:00 PM |
| 19 – May – 2017 | TBD vs TBD | Bangalore | 08:00 PM |
| 21 – May – 2017 | Final | Hyderabad | 08:00 PM |
![]()

