மூத்த நடிகர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

ssr

நேற்று முன் தினம் மூச்சுத் திணறல் காரணமாக பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் முக்கூட்டணியின் ஆதிக்கத்தை மீறி தனித்தன்மை கொண்ட நடிகராக திகழ்ந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவரின் தமிழ் உச்சரிப்புக்கும், நடிப்புக்கும் இப்போதும் கணிசமான ரசிகர்கள் உண்டு.

கடந்த சில தினங்களாக அவர் சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சரியாக சாப்பிட முடியாத நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனே மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். தீவிர சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

By True Tamil

ஜனவரி 21, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு