தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த படம் ஜோக்கர் பாடலாசிரியர் வைரமுத்து.

தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த படம் ஜோக்கர் பாடலாசிரியர் வைரமுத்து.

புதுடெல்லி, ஏப்ரல் 07: 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கபட்டது. இந்த விருதுகளை இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்து வருகிறது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கபட்டு உள்ளது.தர்மதுரை படத்தில் எந்தபக்கம் என்ற பாடலை எழுதியதற்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கபட்டு உள்ளது.

சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு அறிவிக்கபட்டு உள்ளது.

சிறந்த தமிழ்த்திரைப்படமாக ஜோக்கர் தேர்வு செய்யபட்டு உள்ளது.ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவானபடம் இது.

சிறந்த பாடகர் – சுந்தர் ஐயர், படம் ஜோக்கர், பாடல் ஜாஸ்மின்

சிறந்த இந்தி படமாக சோனம் கபூர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான நீரஜா தேர்வாகியுள்ளது.

ரஸ்தம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கிடைத்துள்ளது. இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் வில்லன் ஆவார்.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது – திரு வுக்கு 24 படத்திற்காக வழங்கபட்டு உள்ளது.

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – பீட்டர் ஹெய்ன்ஸ் புலிமுருகன் மலையாள படத்திற்காக தேர்வு செய்யபட்டு உள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது சுரபி லட்சுமி மலையாள படமான மின்னாமின்னங்கு பயர் பிளே படத்திற்காக கிடைத்து உள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு