விராட் கோலி உலக சாதனை

virat-kohli

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான போட்டிகளில் பங்கேற்று 18 சதங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 119 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி, இதுவரை 18 சதங்களை அடுத்துள்ளார். இதற்கு முன்பு சௌரவ் கங்குலி 174 இன்னிங்ஸ்களில் விளையாடி 18 சதங்கள் அடித்ததே அதிவேகமாக 18 சதங்களை எட்டிய சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 55 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்து வீச்சாகும்

By True Tamil

ஜனவரி 21, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு