காவல்துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று தர்ணா போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பைத்தியக்கார முதல்வர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே சாடியுள்ளார்.
காவல்துறையை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரு நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில் காவல்துறையை அவரது அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என போராட்டம் நடத்திய கெஜ்ரிவால் ஒரு பைத்தியகார முதல்வர் என்று விமர்சித்தார்.
இந்த பைத்தியகார முதல்வரின் போராட்டத்தால் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்கவும், பாதுகாப்பிற்காகவும், விடுப்பில் சென்ற போலீசாரின் விடுமுறையை ரத்து செய்ததாகவும் ஷிண்டே கூறினார்.
![]()

