sameera-reddy

இந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும் பிரபலமாக பேசப்பட்டு வந்த பாலிவுட்டின் முன்னணி நடிகையான சமீராவிற்கு நேற்று மாலை திடீர் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் அவர் நடித்துள்ளார். சமீரா ரெட்டி கடந்த 2 வருடங்களாக பிரபல தொழில் அதிபரும் மோட்டார் பைக் நிறுவன அதிபருமான அக்‌ஷய் வர்தாவை காதலித்து வந்தார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கூட கடந்த மாதம் 14ம் தேதி பாந்த்ராவில் உள்ள சமீராவின் வீட்டில் ரகசியமாக நடந்தது.

சமீரா ரெட்டி தனது காதல் மற்றும் திருமணம் பற்றி முன்னதாகவே தெரிவித்திருந்தலும் 3 மாதத்திற்கு பிறகே கல்யாணம் என்ற பந்தத்துக்குள் நுழைவேன் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை அவரச அவரசமாக நேற்று மாலை மும்பையில் உள்ள சமீரா ரெட்டியின் விட்டில் அவரது காதலரான 31 வயதுமிக்க அக்ஷய் வர்டாவை மணந்தார். திருமணத்துக்கு தன்னுடைய நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

கல்யாண பந்தம் மகிழ்ச்சிகரமாக அமைய சமீராவிற்கு சினி உலகம் சார்பாக வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Loading