இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி!

Happy Birthday to Thalapathy Vijay

இளைய தளபதி விஜய் , தளபதி விஜய் ஆனா கதை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி!

“நாளைய தீர்ப்பு” என்கிற படத்தில் அறிமுகமான விஜய். அதனைத் தொடர்ந்து “செந்தூரப்பாண்டி” என்கிற படத்தில் நடித்தார். இதில் விஜயகாந்த் கௌரவ வேடத்தில் நடித்தார். இது வரை மொத்தம் 67 படங்களில் நடித்துள்ள விஜய் 60 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது 61-வது படம் தயாராகி வருகிறது.

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ள படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் 100வது படமாகும். ஏ.ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, சத்யராஜ் என்ற பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர் .

விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால் விஜய் ரசிகர்கள், அவரின் பிறந்தநாளையும், பட தலைப்பையும் மெர்சலாக கொண்டாடி வருவதோடு, டிரெண்டிங்கிலும் கொண்டு வந்துள்ளனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘வெற்றி’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1984ல் ‘வெற்றி’ படம் ரிலீஸ் ஆனது. அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக விஜய் சினிமாவுக்கு நடிக்கவந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.

காதலுக்கு மரியாதை (1998) படத்துக்காகவும், திருப்பாச்சி (2005) படத்துக்காகவும் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை இருமுறை பெற்றவர். ‘விஜய் டி.வி”-யின் விருதுகளை 5 முறை வென்றுள்ளார். இவை தவிர, கில்லி (2004) – ‘சென்னை கார்ப்பரேட் கிளப்’-பின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) – ‘தினகரன்’ நாளிதழின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) – ‘ஃபிலிம் டுடே’ சிறந்த நடிகர் விருது, பொதுச்சேவை அறிவிப்புக்கு (2005) வெள்ளி விருது, போக்கிரி (2007) – தமிழின் சிறந்த நடிகருக்கான ‘அம்ரிதா மாத்ருபூமி’ விருது, போக்கிரி (2007 )- சிறந்த நடிகருக்கான ‘இசை அருவி’ தமிழ் இசை விருது, வேட்டைக்காரன் (2009) – சிறந்த நடிகருக்கான ‘இசை அருவி’ தமிழ் இசை விருது, துப்பாக்கி, நண்பன் (2012) – விகடன் சிறந்த நடிகர் விருது… என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ’புலி’ படத்தின் ‘ஏண்டி ஏண்டி’ பாடலுடன் சேர்த்து 29 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இவருக்கு முதலில் பாடும் வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் தேவா இசையில் மட்டும் பத்து பாடல்களைப் பாடியிருக்கிறார். ‘கத்தி’ படத்தின் வசூல் 100 கோடிகளைத் தொட்டதில் தமிழில் ரஜினிக்குப் பிறகு 100 கோடி க்ளப்பில் இணைந்த நாயகன் விஜய்தான்.

சாதனைகள்:

விஜய் நடித்த கத்தி படம் வெளியான முதல் நாளே 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினிக்கு பிறகு 100 கோடி வசூல் செய்த முதல் ஹீரோ விஜய்தான்

விருதுகள்:

காதலுக்கு மரியாதை படத்துக்காக 1998-ல் ஒருமுறையும், 2005-ல் ‘திருப்பாச்சி’ படத்திற்காகவும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை இருமுறை பெற்றுள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு