மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
அறிவைத் தேடி ஓடுங்கள்! நாளைய வரலாறு உங்கள் நிழலைத் தேடி ஓடிவரும்! இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும் – அண்ணல் அம்பேத்காரின் பொன்மொழிகள்
என்றும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் பின்வாங்காத தன்னிகரில்லா மாமனிதர் புரட்ச்சியாளர் அண்ணல் அம்பேத்கார் மட்டுமே!
61 வது அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
![]()

