மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன்.
இதனை 24ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக அவர்களுக்கு திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் அளித்ததோடு வேலைக்காரன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
மேலும், இந்தப் படம் சமூக கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால், சென்சார் குழு பாராட்டியதாக கூறப்படுகிறது.
![]()

