கலாம் வீட்டிலிருந்து கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கினர்

கலாம் வீட்டிலிருந்து கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கினர்

ராமேசுவரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து இன்று தனது அரசியல் பயணத்தை துவங்கினர் கமல்ஹாசன்.

ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்கு இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் கமல்ஹாசன் சென்றார். கமல்ஹாசனை அப்துல் கலாமின் பேரன் சலீம் நடிகர் வரவேற்று இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார். கலாமின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசினார்.

கலாம் படித்த பள்ளிக்குச் செல்லும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் இன்னும் சற்று நேரத்தில் கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்தித்து பேசுகிறார்.

அதைத்தொடர்ந்து, கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். வழியில் 3 இடங்களிலும் அவரது இயக்கத்தினர் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு கூட்டத்திலும் கமல்ஹாசன் பேசுகிறார்.

கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த நினைவு பரிசை கமலுக்கு வழங்கினார்.

மதுரையில் நாளை நமதே : இன்று மாலை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக, மதுரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் பொதுக்கூட்டம் நடக்கும் பகுதி மற்றும் மாநகரின் சில பகுதிகளில், ‘நாளை நமதே’ என்ற பெயரில் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. தமிழக வரைபடத்தின் மேல் ‘நாளை நமதே’ என அச்சிடப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரபூர்வ கொடியை மாலையில் கமல் அறிவிக்க உள்ளார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு