எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த்!

எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த்!

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, இன்று ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியல் அறிவிப்புக்குப் பின், ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

பின்னர் பேசிய அவர், எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்ற சந்தேகம் எனக்கே உள்ளது. பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது. அரசியல் பாதை பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை எனக்கும் தெரியும்.

தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகியதால் நானும் அரசியல் கற்றுக்கொண்டேன். நான் என் வேலையைச் சரியாகச் செய்து வருகிறேன். 1996 முதல் அரசியல் தண்ணீர் என் மீது தெளிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் கேலி செய்கிறீர்கள். திட்டுகின்ற அரசியலை இனி கைவிட்டுவிடுவோம். அரசியலுக்கு வருவதாக அறிவித்த மறுநாளே கொள்கை என்ன என்று கேட்கிறார்கள்.

தமிழகத்தில் தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே, 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன். என்னால் எம்ஜிஆராக முடியாது எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும். இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள். நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு