சென்னை விமான நிலையத்தில் டீ ரூ.135க்கும், காபி ரூ.180க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் விலையை கேட்டவுடன் வாங்க மறுத்துவிட்டேன் என முன்னாள் நிதி மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டில், சென்னை விமான நிலையத்தில் உள்ள காப்பி ஷாப் ஒன்றில், டீ ஆர்டர் செய்தேன். சூடான நீர் மற்றும் ஒரு டீ பேக்கும் வழங்கினார்கள். அதன் விலை ரூ.135 என்றனர். இதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன். அதனால், ஆர்டர் செய்த டீ வேண்டாம் என மறுத்துவிட்டேன். அது சரியா? தவறா? என கேள்ளிவியும் எழுப்பியுள்ளார்.

இன்னொரு ட்விட்டில் காபி ரூ.180. அதை யார் வாங்குவார்கள் என கேட்டேன். அதற்கு ‘பலர்’ என பதில் வந்தது. நான் பழைமையாகி விட்டேனோ?. எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Loading