கணவர் நடராஜன் உயிரிழந்ததை அடுத்து சசிகலாவுக்கு பரோல்

கணவர் நடராஜன் உயிரிழந்ததை அடுத்து சசிகலாவுக்கு பரோல்

உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் காலமானார். இதையடுத்து அவரின் உடல் பெசண்ட்நகரில் உள்ள அவரின் வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும். இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வருகிறார்.

கணவர் மரணமடைந்ததை அடுத்து அவரது இறுதி சடங்குகளில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் பரோல் சசிகலா தரப்பில் கேட்கப்பட்டது. சிறை நிர்வாகம் அவருக்கு 15 நாட்கள் பரோல் கொடுத்து அனுமதித்துள்ளது.

சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா நேராக காரில் தஞ்சாவூர் சென்று கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு