அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம்! வலுக்கும் எதிர்ப்புகள்!

அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம்! வலுக்கும் எதிர்ப்புகள்!

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். சூரப்பா துணைவேந்தராக பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.

புதிய துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக கடந்த 2009 முதல் 2015 வரை 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

எம்.கே.சூரப்பா நியமனத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஸ்டாலின்

தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் , குறிப்பாக காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில், தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும் தருணத்தில்,கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த திரு எம்.கே. சூரப்பா என்பவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்திருக்கும் மாண்புமிகு தமிழக ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.தேடுதல் குழுவின் கால அவகாசத்தை இன்று நீட்டித்த கையோடு அவசரம் அவசரமாகச் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்தை, கர்நாடக மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது.

மண்ணின் மைந்தர்களாக இருக்கும் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை “காவி” மயமாக்க வேண்டாம் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ராமதாஸ்

கர்நாடகாவில் ஒரு தமிழரை துணை வேந்தராக நியமிக்க முடியுமா என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கீ.வீரமணி

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஒரு கன்னட மாநிலத்தவர் துணை வேந்தராக நியமிக்கப்படவிருப்பது என்பது மாநில உரிமைப் பறிப்பு, சமூக அநீதியானது.

அன்புமணி ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் ஒரு தமிழருக்கு கூட துணைவேந்தராக நியமிக்கப்பட தகுதியில்லை.

கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமித்தது கண்டனத்திற்குரியது; தமிழகத்தின் உயர் கல்வியை பிற மாநில கல்வியாளர்களிடம் ஒப்படைக்கக் கூடாது; நிர்வாகத்திறன் கொண்ட கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா?

வேல்முருகன்

கர்நாடகாவில் பாஜக ஓட்டுகேட்கவே அண்ணா பல்கலை. துணைவேந்தராக சூரப்பா நியமனம். ஒட்டுண்ணி அரசியல் சித்தாந்தத்தை தமிழகத்திலும் செயல்படுத்தி வருகிறது பாஜக.

கமலஹாசன்

கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?

தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு

பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கவில்லை; கல்வி மயமாக்கவே முயற்சி சூரப்பா நியமனத்தை தேவையில்லாமல் அரசியல் ஆக்காதீர்கள்;
கல்வி, திறமையின் அடைப்படையில் மட்டுமே சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

#MKSurappa #AnnaUniversity #KarnatakaElections #BJP #ViceChancellor #TNGovernor #Velmurugan #Stalin #Ramados

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு