ஸ்மார்ட் மொபைல்களின் விலையை ரூ.5000 அதிரடியாக குறைத்துள்ளது மோடோரோலா நிறுவனம்!

ஸ்மார்ட் மொபைல்களின் விலையை ரூ.5000 அதிரடியாக குறைத்துள்ளது மோடோரோலா நிறுவனம்!

அமெரிக்க நிறுவனமான லெனோவா அதன் Moto G5S மற்றும் Moto G5S Plus ஸ்மார்ட் போன்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் Moto G5S மொபைலின் விலை 14,999 ரூபாய் ஆகும்.

இந்நிலையில், 45வது ஆண்டு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு விலை குறைப்பு சலுகையை லெனோவா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 14,999 ரூபாய் விலை கொண்ட Moto G5S ஸ்மார்ட் மொபைலின் விலையில் ரூ.5000 அதிரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது, தற்போது அமேசான் இணையதளத்தின் Moto G5S 9,999 ரூபாய்க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் Moto G6 மொபைல் இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளதால் Moto G5S மொபைலுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த விலை குறைப்பானது இன்னும் 1 நாட்களுக்கு மட்டுமே என்பதால் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Moto G5S சிறப்பம்சங்கள்

  • 4 GB RAM, 32 GB இண்டர்னல் மெமரி (128 GB வரையிலும் அதிகரித்துக் கொள்ளலாம்)
  • டூயல் ஸ்டேண்ட்பை ஆப்ஷனுடன் கூடிய டூயல் நானோ சிம் வசதி (4G+4G)
  • ஆண்ட்ராய்டு v7.1.1 நௌகாட் இயங்குதளம்.
  • 1.4 GHz ஸ்னாப்ட்ராகோன் 430 ஆக்டோ கோர் ப்ரோசெசர்.
  • 16 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா (1.1um, f/2.0, PDAF) எல்.ஈ.டி பிளாஷ் கொண்டது.
  • கெபாசிடிவ் டச்ஸ்கீரீன் உடன் கூடிய 13.2 செமீ (5.1 இஞ்ச்) Full HD (1080 x 1920) டிஸ்பிளே (கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன்)
  • 3000mAH லித்தியம்-அயன் பேட்டரி உடன் 15W  டர்போ சார்ஜிங் மெட்டல் பாடி

[button color=”orange” link=”https://www.amazon.in/gp/product/B0714DP3BC/ref=s9_acss_bw_cg_CG1_5c1_w?pf_rd_m=A1K21FY43GMZF8&pf_rd_s=merchandised-search-1&pf_rd_r=F2SYJ0K430SQK2V22HJR&pf_rd_t=101&pf_rd_p=a49702d2-7856-4aa8-8220-913928c628ef&pf_rd_i=1389401031″ align=”center” target=”_blank”]வாங்குவதற்கு இங்கு கிளிக் செய்யவும்[/button]

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு