அழகிரியை நீக்கி திமுக மீதான குடும்ப அரசியல் பழியை துடைத்த கருணாநிதி: கி.வீரமணி

kveeramani

சென்னை: மு.க.அழகிரியை நீக்கியதன் மூலம் தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்ற பழி துடைக்கப்பட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள கி.வீரமணி தனது அறிக்கையில், கூறியுள்ளதாவது:

“தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந்நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது.

குடும்ப அரசியல் நடத்துகிறது தி.மு.க. என்ற பழி இதன் மூலம் துடைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. இதன் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான ஆரோக்கியமான நடவடிக்கை இது என்பது தாய்க் கழகத்தின் கருத்தாகும்” எனக் கூறியுள்ளார்.

By True Tamil

ஜனவரி 24, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு