65-வது தேசிய திரைப்பட விருதுகள்!

65-வது தேசிய திரைப்பட விருதுகள்!

புதுடில்லி: சினிமா துறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, தேசிய விருதுகளை அறிவிக்கிறது. 65வது தேசிய விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசை [காற்று வெளியிடை] மற்றும் பின்னணி இசை [மாம்] என இரண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த படமாக செழியன் இயக்கிய, “டூ-லெட்” தேர்வாகி இருக்கிறது.

இந்திய சினிமாவில் அதிக வசூல் சாதனை புரிந்த, ராஜமவுலி இயக்கிய பாகுபாலி 2 படத்திற்கு, சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், மக்களைக் கவர்ந்த மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகளுக்காக 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த தமிழ்ப் படத்திற்க்கான விருதினைப் “டுலெட்” பெற்றிருக்கிறது . இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் செழியன். தென்மேற்கு பருவக்காற்று, கல்லூரி, பரதேசி, ஜோக்கர், தாரை தப்பட்டை என முக்கியப் படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன்.

இன்னமும் திரைக்கு வராத இந்தப் படம் திரையிடப்பட்ட விழாக்கள் அனைத்திலும் நிறைய விருதுகளைக் குவித்திருக்கிறது. இப்போது தேசிய விருதையும் வென்றுவிட்டது.

List of 65th National Film Award Winners 

#NationalAwards #NationalFilmAwards #ThondimuthalumDriksakshiyum #baahubali2

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு