மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளை பாடல் வடிவில் கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் பாடகர் கோவன். இவர் பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதாக குற்றம்சாட்டி திருச்சி போலீசார் பாடகர் கோவன் கைது செய்தனர்.
இந்தநிலையில் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு கடந்த மாதம் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை கண்டித்து கோவன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாகவும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் கவுதம் புகார் மனு ஒன்றை போலீசில் அளித்தார்.
அதன்பேரில் பாடகர் கோவன் உள்ளிட்ட சிலர் மீது கண்டோன்மென்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகிம் வழக்குப்பதிவு செய்தார். இந்தநிலையில் இன்று கோவனை போலீசார் கைது செய்தனர்.
![]()

