சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐதராபாத், ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 20-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் காளமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்திலேயே விக்கட்களை இழந்து தடுமாறியது பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னா மற்றும் ராயுடு அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கட்களை இழந்து 182 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராயுடு 79 ரன்களும், ரெய்னா 54 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 183 என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்க்கட்களை பறிகொடுத்தனர். ஒரு முனையில் கேப்டன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி ஆடி அரை சதம் (84) அடிக்க மறுமுனையில் யூசப் பதான்(45) அதிரடி காட்டினார். முக்கியமான கட்டத்தில் வில்லியம்சன், யூசப் பதான் விக்க்கட்களை பறிகொடுக்க ஐதராபாத் அணி வெற்றிக்கு அருகாமையில் வந்து தோல்வியை தழுவியது.

37 பந்துகளில் 79 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு