வேட்பாளர்களை மக்களே தேர்வு செய்வர்: ராகுல்

rahulgandhi

மும்பை: விரைவில் நடைபெற உள்ள பார்லி.,பொது தேர்தலில் 15 தொகுதிகளில் மக்களே வேட்பாளர்களை தேர்வு செய்வர் என ராகுல் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் தேர்வில் மாற்றம்: மகாராஷ்டிரா மாநிலம் வார்தா அருகே உள்ள சேவகாரம் மகாதமா ஆசிரமத்தில்உள்ளாட்சி பிரதிநிதிகளுடனானசந்தி்ப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.இதில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது: நடைபெறஉள்ள தேர்தலில் இருபெரும் கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியில் ஏழு பேர் கொண்ட குழுவினர் தான் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர். இந்த முறை ஊழலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.அதே நேரத்தில்வேட்பாளர்கள் குறித்து உள்ளாட்சி அமைப்புபிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு நடத்தப்படுவதில்லைஇனிமேற்கொண்டு அவை நடைமுறைப்படுத்தப்படும்.

அதே நேரத்தில் நாட்டில் 50 சதவீதம் அளவிற்கு பெணகள் உள்ளனர்.அவர்களுக்கும் சம அந்தஸ்து வழங்க வேண்டும். அதேபோல் கோடிக்கணக்கில் உள்ள இளைஞர்களுக்கும்முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு போதுமான அதிகாரம் வழங்கப்படும்போது தான் இந்தியா வல்லரசாக மாறும். இல்லாவி்ட்டால் வல்லரசாகமாறாது.
உள்ளாட்சிகளுக்கு முக்கியத்துவம்:@@ வரும் பொது தேர்தலில் 15 தொகுதிகளில் வேட்பாகளர்களை தேர்வு செய்வது குறித்து உள்ளாட்சி பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.அப்போது அவர்களின் முடிவே இறுதியானதாகும்.இதற்குரிய பலனை மக்கள் பின்னர் உணருவர்.வரும் காலங்களிலும் இந்த முறை தொடரும் என ராகுல் தெரிவித்தார்.

By True Tamil

ஜனவரி 25, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு