குடியரசு தினவிழாவில் குண்டுவெடிப்பு

boom-blast

குடியரசு தினவிழா கொண்ட்டாடம் தொடங்கும்போது மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத பிரிவுகள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுதந்திர தினவிழாவின்போதும் இம்பால் நகரில் குண்டுகள் வெடித்தன. அதேபோல் குடியரசு தினவிழாவிலும் குண்டு வெடிக்கலாம் என்று கருதி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். அப்படியிருந்தும் குடியரசு தினவிழா தொடங்கும்போது தீவிரவாதிகள் குண்டுவெடித்தனர். நேற்றுக்காலை சரியாக 8 மணிக்கு குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. ஆனால் இந்த குண்டு பதுக்கிவைக்கப்பட்டு வெடிக்கப்பட்டதா அல்லது கையில் வீசி எறிந்து வெடிக்க செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை. மேலும் குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்து எதுவும் தகவல் கிடைக்கவில்லை.

இம்பாலா நகரில் மையப்பகுதியில் உள்ள கங்கலா மைதானத்தில் விழா நடந்தது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் கொண்டு வெடித்தது. நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாநில முதல்வர் ஒக்ரம் ஐபோயி, தீவிரவாத பிரிவுகள் வன்முறையை கைவிட்டுவிட்டு தேசிய நீரோட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்றும் கூறினார். அப்படி இருந்தும் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் 5 தீவிரவாதிகள் பிரிவுகள் ஒன்று சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் மாநிலம் பலாத்காரமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்று இந்த தீவிரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.

By True Tamil

ஜனவரி 27, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு