இந்தியாவுடன் ஜப்பான் நெருக்கம்

Shinzo-Abe

புதுடில்லி: நாட்டின், 65வது குடியரசு தின கொண்டாட்டங்களின் சிறப்பு விருந்தினராக, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்றார்.குடியரசு தின சிறப்பு விருந்தினராக, ஜப்பான் பிரதமர் பங்கேற்றது, இது தான், முதல் முறை.

நம் அண்டை நாடான, சீனாவுக்கும், ஜப்பான் நாட்டிற்கும் இடையே, கிழக்கு சீன கடலில் உள்ள ஒரு தீவை சொந்தம் கொண்டாடுவதில், உரசல் உள்ளது. அது போல், நம் நாட்டிற்கும், சீனாவுக்கும் இடையே, நீண்ட காலமாக, எல்லைப் பிரச்னை நிலவுகிறது. இதனால், இந்தியாவுடன், ஜப்பான், சமீப காலமாக நெருக்கம் காண்பிக்கிறது. ஜப்பான் பிரதமர், ஷின்சோ அபே அழைப்பை ஏற்று, கடந்த ஆண்டு, ஜப்பான் சென்றார், பிரதமர், மன்மோகன் சிங். கடந்த மாதம், ஜப்பான் மன்னர், அகிஹிடோ மற்றும் அவரின் மனைவி மிச்சிகோ, ஆறு நாள் பயணமாக, நம் நாட்டுக்கு வந்தனர். ஆசிய நாடுகளுக்கு அதிக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத ஜப்பான் மன்னர், இந்தியா வந்தது, சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், நம் நாட்டின், 65வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டில்லியில் நடந்த கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக, ஜப்பான் பிரதமர், ஷின்சோ அபே, நேற்று பங்கேற்றார். மூன்று நாள் பயணமாக இங்கு வந்த அவர், முன்னதாக, பிரதமர், மன்மோகன் சிங் உட்பட பல தலைவர்களை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையே, எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.நம் நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், ஜப்பான்பிரதமர் ஒருவர் பங்கேற்பது, இது தான் முதல் முறை.

By True Tamil

ஜனவரி 27, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு