மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் நெருங்கி வரும் நிலையில், Sabarimala Temple பகுதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல–மகர விளக்கு சீசனை முன்னிட்டு, கடந்த நவம்பர் 17 முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கார்த்திகை மாதத்தில் மாலை அணிவித்து விரதம் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள், சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

🚫 போட்டோ, வீடியோ எடுக்க தடை

இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி,

  • சபரிமலை சன்னிதானம்
  • 18-ம் படி
  • மாளிகப்புரம் கோவில்
  • சுற்றுவட்டார பகுதிகள்

ஆகிய இடங்களில் செல்போன், கேமரா மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


🏥 சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான சுகாதார கட்டுப்பாடுகள்

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி:

  • 18-ம் படிக்கு மேல் சன்னிதானப் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம்/வீடியோ எடுக்கவும் தடை.
  • அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, நீர்நிலைகளில் நீராட கட்டுப்பாடு.
  • ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கும் போது மிகுந்த எச்சரிக்கை அவசியம்.
  • குளிக்கும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடி குளிக்க வேண்டும்.
  • குளித்த பின் பயன்படுத்திய துணிகளை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும்.
  • கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.
  • திறந்த வெளிகளில் மலம் கழிக்கத் தடை உள்ளதால், சுகாதாரமான கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு விஷ எதிர்ப்பு மருந்துகள் உள்ளன.
  • மலை ஏறும் போது சோர்வு, மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
    • அவசர உதவி எண்: 04735-203232
  • சபரிமலை பயணத்திற்கு முன் நாட்களில், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்க நடை பயிற்சி, லேசான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

Loading