சைபர் குற்றவாளிகள் சுமார் 17.5 மில்லியன் Instagram பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தரவுகளில் பயனர்பெயர்கள், மொபைல் எண்கள், Email முகவரிகள், மற்றும் சில இடங்களில் இருப்பிட முகவரி (physical address) போன்ற விவரங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தரவுகள் dark web மற்றும் hacker forums-ல் விற்பனை செய்யப்படுவதாகவும், spam, phishing, scam போன்ற தாக்குதல்களில் பயன்படுத்தப்படலாம் என்றும் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வரை, Instagram அல்லது Meta நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் அல்லது விளக்கம் இதுகுறித்து வெளியாகவில்லை. மேலும், Password அல்லது நிதி சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளதா என்பது குறித்த தகவல் தெளிவாக இல்லை.
சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பயனர்கள் சில பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென பரிந்துரைக்கின்றனர்:
🔐 பயனர்கள் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு ஆலோசனைகள்
✔ Password மாற்றம் (Strength + Unique)
✔ Two-factor Authentication (2FA) இயலுமைப்படுத்தல்
✔ தெரியாத links / apps / login pages தவிர்த்தல்
✔ suspicious emails / messages-ஐ திறந்துவிடாமல் கவனமாக இருத்தல்
✔ Data sharing-ஐ குறைத்தல்
🌐 Social Media பயனர்களின் கவலை
இந்த சம்பவம் வெளியானதின் பின்னர், பல பயனர்கள் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு மற்றும் Privacy பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளனர். Social platforms-ல் data breach சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு மேம்பாடு தேவையென நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
![]()

