பெடரரின் சாதனையை நடால் முறியடிப்பார்

roger-federer-nadal

நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரரின் சாதனையை, நடால் நிச்சயம் முறியடிப்பார் என பீட்சாம்ராஸ் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் போட்டிகளிலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்து பெற்றது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் தான்.

ஆண்டுதோறும் அவுஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் என 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர், இதுவரையிலும் 17 பட்டங்கள் வென்று முதலிடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்தப் படியாக சாம்ராஸ்(அமெரிக்கா) 14 பட்டம் பெற்று 2வது இடத்தில் உள்ளார், ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.

உலகின் நம்பர் ஒன் வீரரான ரபெல்நடால்(ஸ்பெயின்) 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்று 3–வது இடத்தில் உள்ளார்.

அவுஸ்திரேலியா ஓபன் பட்டத்தை நடால் வென்று சாம்ராசை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட முடியாமல் வாவ்ரிங்காவிடம் தோற்றார்.

இந்நிலையில் பெடரரின் சாதனையை நடால் முறியடிப்பார் என்று பீட்சாம்ராஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், நடாலின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் பிரமிப்பாக இருக்கிறது, இவர் பந்தை திருப்பி அனுப்பும் விதம் அபாரமாக உள்ளது.

இதுமாதிரி நான் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் நல்ல நிலையில் உள்ளார்.

By True Tamil

ஜனவரி 29, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு