தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம்! டோனி பாய்சல்

msd

தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா இழந்து விட்டது.
நியூசிலாந்து சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

முதலாவது ஆட்டத்தில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 3வது போட்டி டிராவிலும், 4வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இப்போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் அணித்தலைவர் தோல்விக்கு பந்து வீச்சாளர்கள் சரியாக விளையாடததே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எங்களது பந்து வீச்சு மிக மோசமாக இருந்தது.

இதுபோன்ற விக்கெட்டுகளில் ஷார்ட் ஒய்டு பந்து வீச கூடாது, ஆனால் நாங்கள் இதை செய்யவில்லை. புதிய பந்திலும் சரி பழைய பந்திலும் சரி இது போன்று நாங்கள் சரியாக பந்து வீச வில்லை.

வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ஓட்டங்களை விட்டுகொடுத்து விட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், சுழற்பந்து வீசசாளர்கள் சிறந்த முறையிலேயே பந்து வீசினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

By True Tamil

ஜனவரி 29, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு